அவசரமாக இலகுரக டாங்கிகள் வாங்க இந்தியா முடிவு !!

சமீபத்தில் இந்தியா சீனா இடையேயான எல்லை பிரச்சினையின் போது சீனா தனது ZTQ15 இலகுரக டாங்கிகளை எல்லையில் குவித்தது.

இதற்கு பதிலடியாக இந்தியா தனது கனரக T 72 மற்றும்T 90 டாங்கிகளை குவித்தாலும் அவற்றால் மலைப்பகுதியில் இலஙரக டாங்கிகளை போல லாவகமாக செயல்பட முடியாது.

ஆகவே இதற்கான தேவையை உணர்ந்த நிலையில் தற்போது இலகுரக டாங்கிகளை வாங்க முடிவு செய்யப்பட்டுள்ளது.

இந்திய அரசு ரஷ்யாவின் ஸ்ப்ரட் எஸ்.டி எம் 1 ரக டாங்கியை இறக்குமதி செய்ய முடிவு செய்துள்ளது.

ஆனால் இதற்கு மாற்றாக பல தளவாட்ங்கள் உள்ளன, தமது கெஸ்ட்ரல் மற்றும் WhAP வாகனங்களில் டாங்கி துப்பாக்கிகளை வாங்கி பொருத்தி பயன்படுத்தலாம்,

அல்லது இதனை விட சிறந்த பல இலகுரக டாங்கிள் உள்ளன அவற்றை வாங்கலாம்.

ஆகவே நல்ல முடிவு எடுக்கப்பட வேண்டும் என்பது எமது கருத்தாகும்.