இராணுவப்படைகளுக்கு வழங்கப்பட்டுள்ள அவசர சக்திகளை பயன்படுத்தி ரபேல் விமானங்களுக்காக ஹேம்மர் ஏவுகணைகள் வாங்கப்பட உள்ளன.60-70கிமீ தொலைவில் உள்ள இலக்குகளை துல்லியமாக தாக்கியழிக்க கூடியவை இந்த ஹேம்மர் ஏவுகணைகள்.
இதை வாங்குவதற்கான செயல்பாட்டு நடைமுறைகள் நடந்து வருவதாகவும் மிக விரைவிலேயே ரபேல் விமானங்களுக்கு இந்த ஏவுகணை வழங்கப்படும் என பிரான்ஸ் நாட்டு அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
அவசர நிலையில் தேவையாக உள்ளதால் வேறு நாடுகளுக்கு வழங்கப்பட இருந்த ஸ்டாக்கில் இருந்து இந்தியாவிற்கு விரைவாக இந்த ஏவுகணைகள் வழங்கப்பட உள்ளன.
ஹேம்மர் (HAMMER-Highly Agile Modular Munition Extended Range) ஒரு நடுத்தூர ரக வானில் இருந்து தரை நோக்கி ஏவப்படும் ஏவுகணை ஆகும்.
லடாக் போன்ற உயர் பகுதிகளாலும் சரி மற்ற பகுதிகளானாலும் சரி கடினமான பங்கர்கள், விமான பாதுகாப்பு ஷெல்டர்கள் போன்ற இலக்குகளை தாக்கியழிக்க கூடியது.
நிரந்தரமாக உள்ள தரை இலக்கு அல்லது நகர்ந்து செல்லும் இலக்குகளை கூட தாக்கவல்லது.