
மத்திய உள்துறை அமைச்சகம் துணை ராணுவ படைகளிடம் தங்களது வீரர்களிடம் முகநூல் வாட்சாப் இன்ஸ்டாகிராம் உள்ளிட்ட செயலிகளை பயன்படுத்த தடை விதிக்குமாறு கேட்டு கொண்டுள்ளது.
இது குறித்து மத்திய உள்துறை இணை அமைச்சர் ஜி. கிஷன் ரெட்டி அனைத்து துணை ராணுவ படைகளுக்கும் மின்னஞ்சல் ஒன்றை அனுப்பி உள்ளார்.
இதில் ஒய்வு பெற்ற வீரர்களையும் சேர்க்க உள்ளதாகவும் தகவல்கள் தெரிவிக்கின்றன.
கடந்த வாரம் இந்திய தரைப்படை தனது அதிகாரிகள் மற்றும் வீரர்கள் முகநூல் உள்ளிட்ட 89 செயலிகளை பயன்படுத்த தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.