
இந்திய இஸ்ரேல் நட்புறவில் மற்றுமொரு மைல்கல்லாக அமையும் வகையில் வெறும் 30 நொடிகளில் கொரோனா சோதனை செய்யும் கருவியை இணைந்து கண்டுபிடிக்க இரு நாடுகளும் முடிவு செய்துள்ளன.
இதுகுறித்து ட்விட்டரில் பதிவு செய்துள்ள இஸ்ரேலிய தூதரகம் சிறப்பு விமானம் ஒன்றின் மூலமாக இஸ்ரேலிய ஆய்வுக்குழு தலைநகர் தில்லி வரவுள்ளதாகவும்,
பின்னர் இந்திய விஞ்ஞானி விஜயராகவன் அவர்களின் குழுவுடன் இணைந்து இக்கருவியை அவர்கள் தயாரிக்க உள்ளதாகவும் தெரிவித்து உள்ளது.
மேலும் சிறப்பு இஸ்ரேலிய மருத்துவ கருவிகள் உபகரணங்கள் இதே விமானத்தின் மூலமாக கொண்டு வரப்பட்டு இந்திய அரசிடம் ஒப்படைக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது.
மேலும் இது நன்றி கடனை திருப்பி அடைக்கும் நடவடிக்கை எனவும் இஸ்ரேல் தரப்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.
அதாவது கொரோனா தொற்றின் ஆரம்ப காலத்தில் இந்தியா இஸ்ரேலுக்கு சிறப்பு மருந்துகள், பாதுகாப்பு உடைகள் போன்றவற்றை கொடுத்து உதவியது எனவும் இஸ்ரேல் தரப்பு கூறுகிறது.