இந்தியாவும் இஸ்ரேலும் சைபர் தாக்குதல்களை இணைந்து கையாள ஒப்பந்தம் !!
1 min read

இந்தியாவும் இஸ்ரேலும் சைபர் தாக்குதல்களை இணைந்து கையாள ஒப்பந்தம் !!

இந்தியாவும் இஸ்ரேலும் வேகமாக டிஜிட்டல்மயமாகி வரும் உலகில் சைபர் தாக்குல்களை இணைந்து கையாள ஒப்பந்தம் செய்து கொண்டுள்ளன.

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலின் தேசிய சைபர் இயக்குநரகத்தின் இயக்குநர் ஜெனரல் யிகால் உன்னா மற்றும் இஸ்ரேலுக்கான இந்திய தூதர் சஞ்சீவ் சிங்லா ஆகியோரால் கையெழுத்திடப்பட்டது.

இதுகுறித்து யிகால் உன்னா கூறுகையில் இந்த ஒப்பந்தம் இந்தியாவுடனான இஸ்ரேலிய உறவில் மற்றொரு மைல்கல் எனவும், இருதரப்பினரும் தங்களது அனுபவங்களை பகிர்ந்து கொள்ள முடியும். இதன்மூலம் சைபர் தாக்குதல்களை கையாள்வது எளிதாகும் எனவும் கூறினார்.

இதுபற்றி இந்திய தூதர் சஞ்சீவ் பேசுகையில் இந்தியா மற்றும் இஸ்ரேலிய நாட்டு பிரதமர்கள் சைபர் பாதுகாப்பை இரு நாட்டு உறவில் மிக முக்கியமான அம்சமாக கருதினர்.

இந்த ஒப்பந்தத்தில் இஸ்ரேலிய தேசிய சைபர் இயக்குனரகம் மற்றும் இந்தியாவின் அவசரகால கணிணி எதிர்வினை குழு ஆகியவை பங்குதாரர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.