ஒரு புதிய 110கிலோநியூட்டன் என்ஜினை தயாரிக்க இணையும் இந்தியாவின் DRDO மற்றும் இங்கிலாந்தின் ROLLS ROYCE !!

ரோல்ஸ் ராய்ஸ் நிறுவனத்தின் இந்திய மற்றும் தெற்காசிய பிரிவு துணை தலைவரான லூயில் டோனாகி சமீபத்தில் இந்தியாவுடன் இணைந்து ஒரு பதிய என்ஜினை தயாரிக்க உள்ளதாக அறிவித்தார்.

இரு நாட்டு அரசுகளின் ஒத்துழைப்போடு இதனை நாங்கள் செயல்படுத்த விரும்புகிறோம், இதன் மூலம் ஒரு புதிய ஜெட் என்ஜினை நாங்கள் உருவாக்க உள்ளோம், இதன் தனிப்பட்ட உரிமை இந்தியாவுக்கே உரியதாகும் என லூயிஸ் டோனாகி தெரிவித்தார்.

கடந்த 2017ஆம் ஆண்டு இந்தியா வந்த அப்போதைய பிரிட்டன் பாதுகாப்பு செயலர் சர் மைக்கேல் ஃபால்லன் இந்தியா மற்றும் இங்கிலாந்து ஆகியவை இணைந்து பல்வேறு முக்கிய தளவாடங்களை உற்பத்தி செய்வது என முடிவு செய்யப்பட்டது அதில் ஜெட் என்ஜின் தயாரிப்பும் அடங்கும்.

ரோல்ஸ் ராய்ஸ நிறுவனம் இதற்காக தனது புதிய வடிவமைப்பை வழங்க தயாராக உள்ளது என தெரிகிறது இதனை அதிநவீன ஐந்தாம் தலைமுறை விமானங்களிலும் பயன்படுத்தி கொள்ள முடியும் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த உற்பத்தியில் நமது பாதுகாப்பு ஆராய்ச்சி மற்றும் மேம்பாட்டு நிறுவனம் மற்றும் ரோல்ஸ் ராய்ஸ் ஆகியவற்றுடன் பல்வேறு இந்திய நிறுவனங்கள் இணைந்து செயல்பட தயாராக உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.