இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து எல்லையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் : சீன வெளியுறவு அமைச்சகம் !!

  • Tamil Defense
  • July 16, 2020
  • Comments Off on இந்தியாவும் சீனாவும் ஒருங்கிணைந்து எல்லையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் : சீன வெளியுறவு அமைச்சகம் !!

சீனாவின் அரசு ஆதரவு ஊடகமான க்ளோபல் டைம்ஸ் வெளியிட்டுள்ள செய்தியில் இந்தியா மற்றும் சீனா ஆகியவை எல்லையில் சமாதானத்தை நிலைநாட்ட முடியும் என குறிப்பிட்டுள்ளது.

இதுகுறித்து சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூவா சுன்யிங் பேசுகையில் இந்தியா மற்றும் சீனா ஆகிய இருநாடுகளும் ஒன்றாக இணைந்து பணியாற்றி எல்லையில் அமைதியை நிலைநாட்டலாம் என கூறியுள்ளார்.

நேற்று இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் இடையே நடைபெற்ற பேச்சுவார்த்தைக்கு பின்னர் இத்தகைய அறிக்கையை சீனா வெளியிட்டு உள்ளது குறிப்பிடத்தக்கது.

15 மணி நேரம் நடைபெற்ற இந்த பேச்சுவார்த்தையில் இந்தியா சார்பில் லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனா சார்பில் மேஜர் ஜெனரல் லிய லின் ஆகியோர் தலைமையில் இருதரப்பு ராணுவ அதிகாரிகள் கலந்து கொண்டது குறிப்பிடத்தக்கது.