கல்வான் மீதான சீனாவின் உரிமை கோரலை மீண்டும் நிராகரித்த இந்தியா !!

  • Tamil Defense
  • July 10, 2020
  • Comments Off on கல்வான் மீதான சீனாவின் உரிமை கோரலை மீண்டும் நிராகரித்த இந்தியா !!

படிப்படியாக எல்லையில் படைகுறைப்பு இருதரப்பிலும் நடைபெற்று வரும் நிலையில் இந்தியா மீண்டும் சீனாவின் உரிமை கோரலை நிராகரித்து உள்ளது.

இந்திய வெளியுறவு துறை அமைச்சக செய்தி தொடர்பாளர் அனுராக் ஶ்ரீவாஸ்தவா பேசுகையில் ” எல்லை நிலவரம் தொடர்பான கருத்து வேறுபாடுகள் அனைத்தும் சுமுகமான முறையில் பேச்சுவார்த்தை மூலம் தீர்க்கப்பட வேண்டியவை ஆகும், ஆனால் அதே நேரத்தில் இந்தியாவில் இறையாண்மையை பாதிக்கும் எந்த செயலையும் இந்தியா அனுமதிக்காது” என்றார்.

மேலும் அவர் பேசுகையில் இந்திய சீன எல்லையோரம் அமைதி நிலவ வேண்டுமானால் சீனா எல்லை கட்டுபாட்டு கோட்டை மதித்து செயல்பட வேண்டும் என கூறினார்.

மேலும் அவர் பேசுகையில் கல்வான் பள்ளதாக்கு மீதான சீனாவின் உரிமை கோரல்களை மிகைப்படுத்தப்பட்டவை என சாடினார்.