மேம்படுத்தப்பட்ட அல் காலித் ரக டாங்கிகளை படையில் இணைத்த பாகிஸ்தான் !!

  • Tamil Defense
  • July 29, 2020
  • Comments Off on மேம்படுத்தப்பட்ட அல் காலித் ரக டாங்கிகளை படையில் இணைத்த பாகிஸ்தான் !!

பாகிஸ்தான் ராணுவத்தின் கவச படை நேற்று மேம்படுத்த பட்ட அல் காலித் ரக டாங்கிகளை பெற்று கொண்டது.

இந்த நிகழ்ச்சி தக்ஸீலா கனரக தொழிற்சாலையில் நடைபெற்றது, விழாவில் பாகிஸ்தான் ராணுவத்தின் தலைமை தளபதி ஜெனரல் கமார் ஜாவேத் பாஜ்வா கலந்து கொண்டார்.

இந்த மேம்படுத்த பட்ட டாங்கியில் தெர்மல் இமேஜிங் மற்றும் ட்ரைவர் டிஜிட்டல் பேனல் போன்ற நவீன தொழில்நுட்ப அமைப்புகள் பொருத்தப்பட்டுள்ளன.

இந்த டாங்கியால் அணு, உயிரி மற்றும் வேதியியல் தாக்குதல்களில் இருந்து வீரர்களை பாதுகாத்து செயல்பட முடியும் என கூறப்படுகிறது.