காஷ்மீரின் புல்வாமா பகுதியில் ரோந்து சென்றுகொண்டிருந்த சிஆர்பிஎப் வீரர்களின் வாகனம் கண்ணிவெடி தாக்குதலில் சிக்கியதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.
புல்வாமா மாவட்டத்தின் சர்குலர் சாலை பகுதியில் இந்த தாக்குதல் நடைபெற்றுள்ளது.சம்பவத்திற்கு பிறகு தற்போது துப்பாக்கிச்சூடு தொடங்கியுள்ளதாகவும் தகவல் வெளியிட்டுள்ளது.
இந்த தாக்குதலில் ஒரு சிஆர்பிஎப் வீரர் காயமடைந்துள்ளார்.தற்போது அந்த பகுதியை இராணுவ வீரர்கள் சுற்றி வளைத்துள்ளனர்.