
யூனியன் பிரதேசமான காஷ்மீரின் பாரமுல்லா மாவட்டத்தில் உள்ள கிரால்ஹர் பகுதியில் பதுங்கியிருந்த ஹிஸ்புல் பயங்கரவாதி ஒருவனை பாதுகாப்பு படை வீரர்கள் கைது செய்துள்ளனர்.
தாஹிர் அகமது சேக் என்று அடையாளம் காணப்பட்டுள்ள அவன் காஷ்மீரின் பட்கம் பகுதியை சேர்ந்தவன்.அவனிடமிருந்து ஒரு ஏகே-47,25 ரவுண்டு தோட்டாக்கள் மற்றும் ஒரு கிரேனேடு பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.