லடாக்கில் வான் ஆபரேசன்களுக்காக முழு அளவில் தயாராகும் சீனா

கிழக்கு லடாக்கிற்கு மிக அருகே சீனப்பகுதியில் உள்ள ஹோட்டான் வான் படைத் தளத்தின் செயல்பாடுகளை சீனா அதிகரித்துள்ளது.போர்விமானங்கள்,ஆளில்லா விமானங்கள்,குண்டுவீசு விமானங்கள் மற்றும் ஏவுகணை அமைப்புகள் என அனைத்தையும் தயார் நிலையில் வைத்துள்ளதை செயற்கைகோள் படங்கள் உறுதிபடுத்தியுள்ளன.

சீன இராணுவப் படையின் மேற்கு தியேட்டர் கமாண்டின் கீழ் வரும் தளங்களிலேயே இந்த ஹோடன் தளம் மிகப் பெரியது ஆகும்.

காரகோரம் கணவாய்க்கு வடகிழக்கே சுமார் 200கிமீ தூரத்திலும் ,பிங்கர் நான்கு பகுதியில் இருந்து வெறும் 400கிமீ தூரத்திலும் இந்த தளம் அமைந்துள்ளது.60 அடி அகலத்தில் 3330மீ நீளத்தில் ஒரு பெரிய ஓடுதளமும் இந்த தளத்தில் உள்ளது.

இதை மக்கள் பயன்பாட்டிற்கும் சீனா திறந்துவிட்டிருந்தாலும் பெரும்பாலும் இராணுவ பயன்பாட்டிற்காகவே இந்த தளம் உபயோகிக்கப்படுகிறது.

போர் ஏற்படும் பட்சத்தில் இந்த தளம் வெகுவான தாக்கத்தை ஏற்படுத்தும்.