
ஃபிலிப்பைன்ஸ் விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று கயுயான் நகரில் உள்ள தளத்தில் விபத்துக்கு உள்ளானது.
இரவு நேர பறக்கும் திறன்களை சோதிக்க ஹெலிகாப்டர் புறப்பட்ட போது எதிர்பாராத வகையில் கீழே விழுந்து நொறுங்கியது.
விபத்துக்கு உள்ளான ஹெலிகாப்டர் ஃபிலிப்பைன்ஸ் விமானப்படையின் 205ஆவது படையணிக்கு சொந்தமான பெல் ஹூவே ஹெலிகாப்டர் ஆகும்.
தூரதிர்ஷ்வசமாக இந்த விபத்தில் ஹெலிகாப்டரில் இருந்த ஐவரில் இருவர் மரணத்தை தழுவி உள்ளனர்.