Breaking News

நிதியாண்டின் இறுதியில் 1,10,000 கோடிகள் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் இருக்கும் : ஹெ.ஏ.எல் தலைவர் !!

  • Tamil Defense
  • July 11, 2020
  • Comments Off on நிதியாண்டின் இறுதியில் 1,10,000 கோடிகள் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் இருக்கும் : ஹெ.ஏ.எல் தலைவர் !!

தற்போது 52,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ளது,21 நிதியாண்டின் இறுதியில் 1,10,000 கோடிகள் மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் இருக்கும் : ஹெ.ஏ.எல் தலைவர் !!

நமது நாட்டில் வானூர்திகள் மற்றும் அவற்றின் உதிரி பாகங்கள் தயாரிப்பில் ஈடுபடும் ஒரே நிறுவனம் ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவனம் ஆகும்.

இதன் தலைமை நிர்வாக இயக்குநர் ஆர். மாதவன் சமீபத்தில் ஒரு ஊடகத்திற்கு பேட்டி அளித்தார். அதில் அவர் கூறிய முக்கிய விஷயங்களை பற்றி பார்க்கலாம்.

1) சமீபத்தில் மத்திய அரசு சுமார் 39,000 கோடியை பாதுகாப்பு தளவாடங்கள் கொள்முதலுக்கு ஒதுக்கீடு செய்தது, இதில் சுமார் 11,000 கோடி ருபாயில் ரஷ்யாவிடம் இருந்து சுகோய்30 மற்றும் மிக்29 விமானங்கள் வாங்கப்பட உள்ளன. இந்த விமானங்கள் இந்தியா வந்த பின்னர் மேம்படுத்தல் பராமரிப்பு போன்ற பணிகளை தனது நிறுவனம் தான் மேற்கொள்ளும் என கூறினார்.

2) தற்போது எங்களிடம் 52,000 கோடி மதிப்பிலான ஆர்டர்கள் கைவசம் உள்ளது, 21நிதியாண்டின் இறுதியில் 1,10,000 கோடிகள் மதிப்பிலான ஆர்டர்களை நாங்கள் பெறுவோம் எனவும் அதற்கடுத்த நிதியாண்டில் சுமார் 2,05,000 கோடிகள் மதிப்பிலான ஆர்டர்களை பெறுவோம் எனவும் நம்பிக்கை தெரிவித்தார்.

3) விரைவில் 83 தேஜாஸ் மார்க்1 போர் விமானங்களுக்கான தயாரிப்பு பணிகள் தொடங்க உள்ளதாகவும், அதை தொடர்ந்து 15 இலகுரக தாக்குதல் ஹெலிகாப்டர்களுக்கான ஆர்டர் கிடைக்கும் எனவும். புதிய இலகுரக பயன்பாட்டு ஹெலிகாப்டர் தயாரிப்பு நிலைக்கு ஆயத்தமாக உள்ளதாகவும், தேஜாஸ் மார்க்2, ஆம்கா உள்ளிட்ட திட்டங்களும் வரிசையாக வரும் எனவும் கூறினார்.

4) மேலும் சுகோய்30 மற்றும் மிக்29 போர் விமானங்களுக்கான என்ஜின் தயாரிப்பு பணிகளுக்கான ஆர்டரை எதிர்நோக்கி உள்ளதாகவும் அவர் கூறினார்.