
கடந்த வியாழக்கிழமை அன்று இந்திய விமானப்படை முதல் 5 ரஃபேல் போர் விமானங்களை பெற்று கொண்டது.
இதனையடுத்து முன்னாள் இந்திய கிரிக்கெட் வீரரான சச்சின் டெண்டுல்கர் ட்விட்டரில் இந்திய விமானப்படைக்கு வாழ்த்து தெரிவித்தார்.
அந்த பதிவில் “ரஃபேல் விமானங்களை பெற்ற இந்திய விமானப்படைக்கு எனது மனமார்ந்த வாழ்த்துக்கள்,
தேசத்தை அயராது பாதுகாக்கும் முப்படையினருக்கு இது புது உத்வேகத்தை அளிக்கும்” என குறிப்பிட்டுள்ளார்.
சச்சின் டெண்டுல்கர் இந்திய விமானப்படையில் க்ருப் கேப்டனாக (கவுரவ பதவி) உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.