
ஜம்மு காஷ்மீர் யூனியன் பிரதேசத்தில் பலரும் குடியேற்றத்திற்காக விண்ணப்பித்து வருகின்றனர்.
இந்த நிலையில் அம்மாநில நிர்வாகம் ஒய்வு பெற்ற கோர்க்கா வீரர்களுக்கு குடியேற்ற சான்றிதழ்களை வழங்கி உள்ளது இதுவரை 6,600 பேர் குடியேற்ற சான்றிதழ்களை பெற்றுள்ளனர்.
ஜம்மு காஷ்மீரில் கோர்க்காளிகள், வால்மீகி, பாகிஸ்தான் அகதிகள் மற்றும் பிற மாநிலத்தவரை திருமணம் செய்து கொண்டோருக்கு நீண்ட காலமாக அங்கு வாழ்ந்தாலும் குடியேற்ற உரிமை இல்லை தற்போது இதனை மாற்றி சட்டம் பிறப்பிக்கப்பட்டுள்ளது.
இதன் காரணமாக தலைமுறை தலைமுறையாக இந்திய ராணுவத்தில் பணியாற்றி ஒய்வு பெற்ற கோர்க்கா வீரர்களுக்கும் தற்போது குடியேற்ற சான்றிதழ்கள் வழங்கப்படுகிறது.