1 min read
சீனாவுக்கு எதிராக உலக நாடுகள் கூட்டமைப்பு-அமெரிக்கா சூசகம்
சீனாவின் கம்யூனிச கட்சிக்கு எதிராக உலக நாடுகள் கூட்டமைப்பு ஒன்றை விரும்புவதாக அமெரிக்க ஸ்டேட் செகரட்டரி மைக் பாம்பியோ அவர்கள் தெரிவித்துள்ளார்.இங்கிலாந்து வெளியுறவு செயலாளர் டொமினிக் ராப் அவர்களுடனான கூட்டுச் சந்திப்பிற்கு பிறகு அமெரிக்க செயலாளர் மைக் பாம்பியோ அவர்கள் இந்த தகவலை வெளியிட்டுள்ளார்.இந்த கூட்டின் மூலம் பக்கத்து தேசங்களை மிரட்டும் சீனாவின் செயலுக்கு முடிவுகட்ட வேண்டும் என அவர் கூறியுள்ளார்.
சர்வதேச விதிகளுக்கு உட்பட்டு சீனா செயல்பட வேண்டும் என்பதை உலக நாடுகள் உறுதி செய்ய வேண்டும் என அவர் கூறியுள்ளார்.உலக நாடுகளின் சுதந்திரத்தை சீனா மதித்து நடக்க வேண்டும் என அவர் கூறியுள்ளார்.