
ஜீன் 15 தாக்குதலில் வீரத்துடன் போரிட்டு சீனர்களை துவம்சம் செய்து வீரமரணம் அடைந்த 20 வீரர்களின் பெயர்களும் தேசிய போர் நினைவகத்தில் பொறிக்கப்பட உள்ளன.
இதற்கான வேலைப்பாடுகள் தொடங்கப்பட உள்ளன.இவற்றை செய்து முடிக்க சிலமாதங்கள் ஆகலாம் என தகவல்கள் வெளியாகியுள்ளது.
கடந்த ஐந்து தலைமுறைகளில் இந்தியாவிற்கும் சீனாவிற்கும் நடந்த மோதல்களிலே பெரிய மோதலாக இந்த கல்வான் சம்பவமாக இது உள்ளது.கிட்டத்தட்ட இரவு பல மணி நேரம் இந்த மோதல் நடந்துள்ளது.
இந்த தாக்குதலில் 16வது பீகார் ரெஜிமென்டின் கட்டளை அதிகாரி கலோனல் சந்தோஷ் பாபு வீரமரணம் அடைந்தார்.அவருடன் சேர்த்து 20 வீரர்கள் வீரமரணம் அடைந்தனர்.
துப்பாக்கிகள் ஏதும் பயன்படுத்தப்படாமல் கைகளாலும் கூரிய ஆயுதங்களாலும் இந்த தாக்குதல் நடைபெற்றது குறிப்பிடத்தக்கது.