S-400 vs ரபேல் : பிரான்சின் ரபேலுக்கு எதிராக எஸ்-400ஐ களமிறக்கும் துருக்கி
1 min read

S-400 vs ரபேல் : பிரான்சின் ரபேலுக்கு எதிராக எஸ்-400ஐ களமிறக்கும் துருக்கி

பிரான்ஸ் மற்றும் எகிப்தின் ரபேல் மற்றும் மிராஜ் விமானங்களுக்கு எதிராக துருக்கி நாடு தனது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை லிபியாவில் நிலைநிறுத்த உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

பிரான்சின் ரபேல் விமானங்கள் லிபியாவில் துருக்கி ஆதரவு நிலைகளை தாக்கி வருவதால் தனது எஸ்-400 வான் பாதுகாப்பு ஏவுகணைகளை ஆக்டிவ் செய்ய உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஏற்கனவே பிரான்சின் ரபேல் விமானங்கள் துருக்கிய ரேடார்கள் மற்றும் வான்பாதுகாப்பு அமைப்புகள் கண்களில் மண்ணை தூவி லிபியாவில் உள்ள அல்-வாதியா வான்படை தளத்தை தாக்கியுள்ளன.இந்த தளத்தை தான் துருக்கி தனது எப்-16,பி2 மற்றும் ஆன்மா எஸ்-ட்ரோன்களை இயக்க உபயோக படுத்தியது.இவற்றை பாதுகாக்க MIM-23 ஹாக் வான்பாதுகாப்பு அமைப்பையும் உபயோகப்படுத்தியது.