இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே 4ஆவது சுற்று பேச்சுவார்த்தை !!

  • Tamil Defense
  • July 14, 2020
  • Comments Off on இன்று இந்திய சீன ராணுவ கமாண்டர்கள் இடையே 4ஆவது சுற்று பேச்சுவார்த்தை !!

இன்று காலை 11:30 மணியளவில் இந்திய மற்றும் சீன ராணுவ கமாண்டர்கள் இடையேயின 4ஆவது சுற்று பேச்சுவார்த்தைகள் தொடங்கி உள்ளன.

இதில் இந்தியா சார்பில் 14ஆவது கோர கட்டளை அதிகாரியான லெஃப்டினன்ட் ஜெனரல் ஹரீந்தர் சிங் மற்றும் சீனா சார்பில் தெற்கு ஸின்ஜியாங் ராணுவ பகுதி தளபதியுமான மேஜர் ஜெனரல் லியு லின் ஆகியோர் கலந்து கொள்கின்றனர்.

இந்த சுற்று பேச்சுவார்த்தையில் தெப்ஸாங், தவ்லத் பெக் ஒல்டி செக்டாரில் உள்ள சீன படைகள் பின்வாங்குவது மற்றும் இருதரப்பிலும் சேர்த்து லடாக்கில் குவித்துள்ள 30ஆயிரம் துருப்புகள், பிரங்கிகள், டாங்கிகள் உள்ளிட்ட தளவாடங்களை பின்வாங்குதல் குறித்து பேசப்படும் என கூறப்படுகிறது.

மேலும் இந்தியா சார்பில் பாங்காங் ஸோ , ஹாட் ஸ்ப்ரிங்ஸ் உள்ளிட்ட பகுதிகளில் சீனா இன்னும் பின்வாங்க வேண்டும் என வலியுறுத்தப்படும் என தகவல்கள் தெரிவிக்கின்றன.