
ஒடிசா மாநிலம் கந்தமால் மாவட்டம் நக்ஸலைட்டுகள் ஆதிக்கம் நிறைந்த பகுதிகளில் ஒன்றாகும்.
நேற்று காலை இந்த மாவட்டத்தில் உள்ள த்துமுடிபந்த் பகுதியில் கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் ஒடிசா காவல்துறை அதிரடி படையினர் தேடுதல் வேட்டை மேற்கொண்டனர்.
அப்போது பதுங்கி இருந்து நக்ஸல்கள் அதிரடி படை வீரர்கள் மீது தாக்குதல் நடத்தினர், சுதாரித்து கொண்ட வீரர்கள் திரும்பி தாக்குதல் நடத்தினர்.
இதில் 4 நக்ஸல்களும் வீழ்த்தப்பட்டனர், இதில் ஒருவர் பெண் என்பது குறிப்பிடத்தக்கது. அவர்களிடமிருந்து ஒரு இன்சாஸ் துப்பாக்கி நாட்டு துப்பாக்கி மற்றும் மாவோயிஸ புத்தகங்கள் கைப்பற்றப்பட்டன.