
இந்திய கடற்படையின் மேற்கு கட்டளையகத்தை சேர்ந்த 4 கடற்படை அதிகாரிகள் மற்றும் பிற 14 பேர் மீது போலி பில்கள் மூலமாக பண மோசடி செய்த காரணத்தால் சி.பி.ஐ வழக்குபதிவு செய்துள்ளது.
இவர்கள் தகவல் தொழில்நுட்ப கருவிகளை வாங்கியதற்கான பில்களில் மோசடி செய்து சுமார் 6.76கோடி ருபாய் மோசடி செய்துள்ளனர்.
இதனை கண்டுபிடித்த இந்திய கடற்படை நிர்வாகம் தகுந்த நடவடிக்கை எடுத்ததன் பேரில் சி.பி.ஐ வழக்கு பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறது.
கேப்டன் அதுல் குல்கர்னி, கமாண்டர் மந்தார் காட்போலே, கமாண்டர் ஆர் பி ஷர்மா மற்றும் பெட்டி ஆஃபீஸர் குல்தீப் சிங் பெகல் ஆகிய கடற்படை அதிகாரிகள் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு உள்ளது.
இவர்களை தவிரத்து மத்திய பாதுகாப்பு துறை கணக்கர் பிரிவின் 4 அதிகாரிகள், ஸ்டார் நெட்வொர்க், மோக்ஷ் இன்ஃபோஸீஸ், சைபர்ஸ்பேஸ் இன்ஃபோவிஷன் மற்றும் ஏ.சி.எம்.இ நெட்வொர்க்ஸ் ஆகிய நிறுவனங்களின் அதிகாரிகள் மீதும் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.
தவறில்லாத துறைகள் எந்த நாட்டிலும் இருப்பதில்லை ஆனால் அதற்கான தீர்வுகள் தான் தவறுகளை குறைக்க வழிவகை செய்கின்றன அந்த வகையில் நம் நாட்டின் ஆயுதப்படைகளில் ஒழுங்கு நடவடிக்கைகள் சிறப்பாக இருப்பதை இது போன்ற நிகழ்வுகள் உறுதி செய்கின்றன,
தவறிழைத்தவர்கள் தப்பிக்க வைக்கப்படாமல் தண்டிக்கப்படுவது தான் சிறப்பான நிர்வாகத்திற்கு உதாரணம் ஆகும் அந்த வகையில் முப்படைகள் நாட்டின் பெரும்பாலான அமைப்புகளை விட பன்மடங்கு சிறந்தவை தான்.