அடுத்த வருடம் இந்தியா வரும் 4 புதிய பி8ஐ விமானங்கள், சீன பாகிஸ்தான் கடற்படைகளுக்கு பெரும் சவால் !!

  • Tamil Defense
  • July 21, 2020
  • Comments Off on அடுத்த வருடம் இந்தியா வரும் 4 புதிய பி8ஐ விமானங்கள், சீன பாகிஸ்தான் கடற்படைகளுக்கு பெரும் சவால் !!

இந்திய கடற்படையின் நீர்மூழ்கிகள் கப்பல் எதிர்ப்பு, கண்காணிப்பு, எலக்ட்ரானிக் முடக்குதல் ஆகிய திறன்கள் மேலும் வலுப்படுத்தப்பட உள்ளன.

அடுத்த வருடம் அமெரிக்காவிடம் நாம் ஆர்டர் செய்த 4 புதிய பி8ஐ பல்திறன் விமானங்கள் இந்தியா வர உள்ளன, இவை வந்து சேரும் பட்சத்தில் மேற்கு கடலோர பகுதியில் பாகிஸ்தான் மற்றும் சீன கடற்படை நடமாட்டங்களை கண்காணிக்க உதவும், இதன் மூலம் அப்பகுதியில் நமது பலம் கணிசமாக அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.

இதைத்தவிர மேலும் கூடுதலாக இத்தகைய 6 விமானங்களை வாங்க 2021ஆம் ஆண்டு போயிங் நிறுவனத்துடன் இந்திய அரசு பேச்சுவார்த்தை நடத்த முடிவு செய்துள்ளது.

இத்தகைய விமானங்கள் 8 ஏற்கனவே இந்திய கடற்படையால் இயக்கப்படுவது குறிப்பிடத்தக்கது, ஆக 18 விமானங்களையும் நாம் பெறும் பட்சத்தில் தெற்காசிய பகுதியில் நமது வலிமை பெரிய அளவில் அதிகரிக்கும் என்பதில் ஐயமில்லை.