இருவேறு என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்
1 min read

இருவேறு என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை வீழ்த்திய வீரர்கள்

ஜம்மு காஷ்மீரில் நடைபெற்ற இருவேறு என்கௌன்டரில் ஐந்து பயங்கரவாதிகளை இராணுவ வீரர்கள் வீழத்தியுள்ளனர்.

தெற்கு காஷ்மீரின் அனந்தநாக் மாவட்டத்தின் சரிகுப்வாரா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டிரில் இரு ஜெய்ஸ் பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.

அதே போல பாரமுல்லா மாவட்டத்தின் சோபோர் பகுதியின் குல்ஷன் அபாட் ரேபன் ஏரியா பகுதியில் நடைபெற்ற என்கௌன்டரில் மூன்று பயங்கரவாதிகள் வீழ்த்தப்பட்டனர்.