நான்கு நாட்களுக்கு பிறகு அமெரிக்க கடற்படை கப்பலில் பற்றி எரிந்த தீ அணைப்பு !!
அமெரிக்க கடற்படையின் முன்னனி போர்கப்பல்களில் ஒன்று யு.எஸ்.எஸ். போன்ஹாமி ரிச்சர்ட்.
இது நமது விக்ரமாதித்யா அளவுக்கு பிரமாண்டமான கப்பல் ஆகும், இது உலகின் எப்பகுதியிலும்அமெரிக்க படைகளை குவிக்க உதவும் கலன்களில் ஒன்றாகும்.
கடந்த 12ஆம் தேதி சான் டியகோ கடற்படை தளத்தில் பராமரிப்பு பணிகளுக்காக நிறுத்தி வைக்கப்பட்டிருந்த கப்பலில் காலை 8.30 மணிக்கு தீ பிடித்துள்ளது.
இதனையடுத்து கப்பலில் தீ வேகமாக பரவியது, மேலும் நீண்ட நேரம் கொழுந்து விட்டு எரிந்த தீயால் கப்பலின் கட்டுபாட்டு பகுதி உடைந்து நொறுங்கியது.
தொடர்ந்து நான்கு நாட்களாக எரிந்த தீ அணைக்கப்பட்டு விட்டதாக அமெரிக்க கடற்படையின் ரியர் அட்மிரல் ஃபிலிப் ஸோபெக் அறிவித்துள்ளார்.
மேலும் அவர் தீ அணைப்பு பணியில் தொடர்ந்து ஈடுபட்ட கடற்படை வீரர்கள், கடலோர காவல்படையினர், தீயணைப்பு வீரர்கள் உள்ளிட்டோருக்கு நன்றி தெரிவித்தார்.
அதிக வெப்பம் மற்றும் கரும்புகையை சுவாசித்த காரணத்தில் பாதிக்கப்பட்ட 40 கடற்படை வீரர்கள் மற்றும் 23 பொதுமக்கள் சிகிச்சை பெற்று வீடு திரும்பி விட்டதாகவும் அவர் தெரிவித்தார்.