
நேற்று லெபனானில் இருந்து இயங்கும் ஹெஸ்புல்லாஹ் பயங்கரவாத அமைப்பு, இஸ்ரேலுக்கு சொந்தமான ஷேபா ஃபார்ம்ஸ் பகுதியில் ஊடுருவ முயற்சி செய்துள்ளது.
இதனையடுத்து இஸ்ரேல் பாதுகாப்பு படையினருடன் மிக கடுமையான மோதல் ஏற்பட்டுள்ளது, இதில் ஹெஸ்புல்லாஹ் உறுப்பினர்கள் கொல்லபட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இதனையடுத்து இஸ்ரேல் பிரதமர் பென்ஜமின் நேதன்யாகு நெருப்புடன் விளையாட வேண்டாம் என ஹெஸ்புல்லாஹ் இயக்கத்திற்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.
அதே நேரத்தில் கடந்த வாரத்தில் இஸ்ரேல் விமானப்படை சிரியாவில் நடத்திய தாக்குதலில் தங்களது உறுப்பினர் கொல்லப்பட்டதாகவும்,
விரைவில் இதற்கு பழிதீர்ப்போம் எனவும் ஹெஸ்புல்லாஹ் இயக்கம் அறிவிப்பு ஒன்றை வெளியிட்டு உள்ளது.