இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இங்கிலாந்து !!

  • Tamil Defense
  • July 13, 2020
  • Comments Off on இந்தியாவுக்கு நன்றி தெரிவித்த இங்கிலாந்து !!

இந்தியா உலக வாரம் எனும் நிகழ்வு இந்தியா இன்க் எனப்படும் ஊடக குழுவால் நடத்தப்படுகிறது. இந்த நிகழ்வில் இங்கிலாந்து அரசின் மூத்த அதிகாரிகள் பலர் கலந்து கொண்டனர்.

இங்கிலாந்து அரசு சார்பில் அதிகாரிகள் பலர் பாரிசிட்டமல் மாத்திரை ஏற்றுமதிக்காக இந்தியாவுக்கு நன்றி தெரிவித்தனர் மேலும்,

அதில் கலந்து கொண்டு பேசிய இங்கிலாந்து சுகாதார துறை செயலாளர் மேட் ஹேன்காக் இந்திய ஒரு தொழில்நுட்ப சக்தி எனவும் இங்கிலாந்தில் பணியாற்றி வரும் இந்திய மருத்துவ பணியாளர்களின் பங்களிப்பையும் வெகுவாக பாராட்டினார்.

மேலும் அவர் பேசுகையில் இந்திய பிரதமர் மோடி இந்தியாவை உலகின் மருந்தகம் என கூறியது உண்மை தான் எனவும்,

இங்இலாந்தின் மருந்துகளில் 40% இந்தியாவில் தயாரிப்பு கட்டத்தை தாண்டி வந்தவை எனவும் கூறினார்.

அதை போலவே இங்கிலாந்து வெளியுறவு துறை செயலாளர் டொமினிக் ராப் பேசுகையில் இங்கிலாந்து இந்திய உறவு பலப்பட வேண்டும் எனவும், வர்த்தக ரீதியாக இருநாடுகளும் நெருங்கி பணியாற்ற வேண்டும் எனவும் கூறினார்.