
சீக்ஸ் ஃபார் ஜஸ்டிஸ் எனும் காலிஸ்தான் ஆதரவு அமைப்பு காலிஸ்தான் பிரிவினைக்கு ஆதரவாக பொது வாக்கெடுப்பை நடத்த முயன்று வருகிறது.
இங்கிலாந்திலும் இதற்கான முயற்சிகளில் அந்த அமைப்பு ஈடுபட்டு வருகையில் இங்கிலாந்து அரசு அதற்கு எதிர்ப்பை தெரிவித்துள்ளது.
இது குறித்து இங்கிலாந்து தூதர் அளித்த பேட்டியில ஒருவரின் கருத்தை வெளிபடுத்த உரிமை உண்டு ஆனால் ஒரு நாட்டை பிரிக்கும் முயற்சியை அனுமதிக்க முடியாது எனவும்,
இந்திய பஞ்சாப் மாநிலம் இந்தியாவின் பிரிக்க முடியாத அங்கம் எனவும் இதில் இங்கிலாந்து அரசு எந்த வகையிலும் சம்பந்தப்படவில்லை எனவும் அவர் கூறினார்.
சில நாட்கள் முன்னர் தான் கனேடிய அரசு இந்த அமைப்பின் முயற்சிக்கு தடை விதித்தது குறிப்பிடத்தக்கது.