
இங்கிலாந்து அரசு சீனாவின் ஹூவாய் நிறுவனத்தை தனது 5ஜி தொழில்நுட்ப நிறுவதல் பணிகளில் இருந்து வெளியேற்றி உள்ளது.
இங்கிலாந்தின் டிஜிட்டல், ஊடகம், விளையாட்டு, கலாச்சார செயலர் ஆலிவர் டவ்டென் இந்த அறிவிப்பை வெளியிட்டார் மேலும் அந்நாட்டு பாராளுமன்றமான ஹவுஸ் ஆஃப் காம்மன்ஸில் இந்த வருட இறுதி முதல் ஹூவாய் பொருட்களின் இறக்குமதி முற்றிலும் தடை செய்யப்படும் எனவும், 2027ஆம் ஆண்டு வாக்கில் அனைத்து ஹூவாய் கருவிகளும் இங்கிலாந்து தகவல் தொடர்பு உள்கட்டமைப்பில் இருந்து அகற்றப்படும் எனவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் பிரிட்டனுடைய தேசிய சைபர் பாதுகாப்பு மையம் ஹூவாய் நிறுவன பொருட்களால் தேசிய பாதுகாப்புக்கு இருக்கும் அச்சுறுத்தல்களை அடுத்து பரிந்துரை செய்ததின் அடிப்படையில் இந்த முடிவை அரசு எடுத்ததாக கூறினார்.
இங்கிலாந்து அரசு தேசிய சைபர் பாதுகாப்பு மையத்தின் பரிந்துரையை ஆதரித்து ஏற்றுகொள்வதாகவும் அதுவே தேசிய பாதுகாப்புக்கு உகந்தது எனவும் அவர் கூறினார்.
இதை தவிர இங்கிலாந்தின் ஃபைபர் கட்டமைப்பில் இருந்தும் ஹூவாய் கருவிகளை அகற்ற அந்நாட்டு அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.