லிபியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்க எகிப்து தயாராகிறது : ராணுவ நிபுணர் !!

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on லிபியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்க எகிப்து தயாராகிறது : ராணுவ நிபுணர் !!

லிபியாவில் முன்னாள் படை தளபதியான ஹஃப்தாரின் படைகளுக்கு எகிப்து தீவிர ஆதரவு வழங்கி வருகிறது.

அதே நேரத்தில் துருக்கி ஆதரவுடன் செயல்படும் ஜி.என்.ஏ படையினருக்கு கடுமையான எச்சரிக்கைகளை விடுத்து வந்தது.

இந்த நிலையில் ஒய்வு பெற்ற எகிப்து ராணுவ அதிகாரியும் ராணுவ நிபுணருமான ஜெனரல் மஹ்ஃபூஸ் மார்ஸூக் லிபியாவில் ராணுவ நடவடிக்கை எடுக்க எகிப்து தயாராகி வருவதாக கூறியுள்ளார்.

கடந்த திங்கட்கிழமை அன்று லிபிய பாராளுமன்றம் எகிப்து மற்றும் லிபிய நாடுகளுக்கு பாதுகாப்பு அச்சுறுத்தல் ஏற்பட்டால் லிபியாவில் எகிப்து ராணுவ நடவடிக்கை மேற்கொள்ள அனுமதி அளித்துள்ளது.

இதுபற்றி ஜெனரல் மஹ்ஃபூஸ் அவர்களிடம் ரஷ்ய ஊடகம் எடுத்த பேட்டியில், ஜூன் இறுதியில் எகிப்து அதிபர் அல் சிஸி லிபிய பழங்குடியினருக்கு ஆயுதமும் பயிற்சியும் எகிப்து அளிக்கும் எனவும், தற்போதைய சூழலில் லிபியாவில் எகிப்து ராணுவ நடவடிக்கை எடுத்தால் அது நியாயமானதாகும் எனவும் கூறினார்.

மேலும் ஜி.என்.ஏ படையினருக்கு சிர்டே நகரத்தை தாண்ட கூடாது எனவும் எச்சரிக்கை விடுத்தார்.

இரண்டாவதாக, இதனை மீறும் பட்சத்தில் ராணுவ ரீதியாக எகிப்து நடவடிக்கை எடுத்தால் அரசியல் ரீதியாக அது நியாயமான செயலாகும்.

சமீப காலங்களில் எகிப்து படைகள் பயிற்சி மேற்கொள்ளும் விதமும் பயன்படுத்தும் ஆயுதங்களும் ராணுவ நடவடிக்கையை உணர்த்துகிறது என்றார்.

மூன்றாவதாக, எகிப்திய கடற்படை மேற்கொள்ளும் பயிற்சிகளும், வான்வழி மற்றும் கடல்வழி உட்புகுதலும் மிக நீண்ட தூரம் உள்ளே புகுந்து தாக்குவதற்கு அடையாளமான பயிற்சிகள் என்கிறார் ஜெனரல் மஹ்ஃபூஸ்.

ஆனால் நிலைமை எப்படி வேண்டுமானாலும் மாறலாம் ஆகவே கணிப்புகளை மட்டுமே வைத்து செயல்பட கூடாது எனவும் அவர் கூறினார்.