இந்தியா ஒரு வீக்கான நாடு அல்ல;லடாக்கில் இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங்

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on இந்தியா ஒரு வீக்கான நாடு அல்ல;லடாக்கில் இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங்

இந்தியா ஒரு வீக்கான நாடு அல்ல; உலகின் எந்த படையும் இந்தியாவில் இரு இன்ச் நிலத்தை கூட எடுக்க முடியாது என லடாக்கில் இராணுவ அமைச்சர் இராஜ்நாத் சிங் பேசியுள்ளார்.

இரு நாள் பயணமாக லடாக் சென்றுள்ள அமைச்சர் லே பகுதியில் உள்ள ஸ்டாக்னா என்னும் இடத்திற்கு பயணம் செய்தார்.லுகுங் என்னுமிடத்தில் உள்ள காவல் நிலைக்கு சென்ற அவர் இந்திய வீரர்களுடன் உரையாடினார்.

அப்போது பேசிய அமைச்சர் இராஜ்நாத் சிங் யாரும் ஒரு இன்ச் நிலத்தை கூட இந்தியாவிடம் இருந்து எடுக்க முடியாது என பேசினார்.பேச்சுவார்த்தைகள் நடந்தாலும் பிரச்சனை எப்போது முடிவடையும் என்பது கேள்விக்குறியாகவே உள்ளது.

இராணுவ தளபதி மற்றும் ஒருங்கிணைந்த தளபதியுடன் இராணுவ அமைச்சரும் லூகுங்கில் இந்திய இராணுவம் மற்றும் இந்தோ திபத் எல்லைப் படை வீரர்களுடன் உரையாடினார்.

இராணுவ அமைச்சர் முன்னிலையில் இராணுவத்தின் முன்னனி போர் டேங்குகளான டி-90 போர்பயிற்சிகள் மேற்கொண்டன.

இராணுவத்தின் பாரா வீரர்கள் போர்பயிற்சிகளை செய்து காட்டினர்.

பாரா சிறப்பு படை வீரர்