சீனாவை குறிவைத்து மிக தீவிரமான பாதுகாப்பு கொள்கையை வெளியிட்ட ஆஸ்திரேலியா !!

ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் நேற்று ஆஸ்திரேலிய முப்படைகளுக்கான புதிய பாதுகாப்பு கொள்கையை வெளியிட்டார்.

இந்த கொள்கை மிக தெளிவாக சீனாவை குறிவைத்து உருவாக்கப்பட்டுள்ளது என்பதை காட்டுகிறது.

அடுத்த 10 வருடங்களில் ஆஸ்திரேலியா தனது பாதுகாப்பு படைகளுக்கு சுமார் 270பில்லியன் அமெரிக்க டாலர்கள் (அதாவது இந்திய மதிப்பில் 20 லட்சத்து 25 ஆயிரம் கோடி ) செலவிட உள்ளது.

இரண்டாம் உலகப்போருக்கு பின்னர் ஆஸ்திரேலியா இந்தளவுக்கு ஆபத்தை எதிர்கொன்டதில்லை ஆகவே கொரோனாவுக்கு பிந்தைய ஏழ்மையான, ஆபத்தான, ஒழுங்கற்ற உலகிற்கு ஆஸ்திரேலியா தயாராக போவதாக ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிஸன் கூறியுள்ளார்.

இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் பாதுகாப்பு சவால்களை எதிர்கொள்ளும் வகையில் அடுத்த பத்தாண்டுகளில் ஆள்பலம், தளவாடங்கள், கணினி போர்முறை ஆகியவற்றில் ஆஸ்திரேலியோ மிகப்பெரிய அளவில் முதலீடு செய்ய உள்ளது.

தனது கடற்படை கப்பல்களுக்கு அமெரிக்காவில் இருந்து ஏ.ஜி.எம்158சி தொலைதூர கப்பல் எதிர்ப்பு ஏவுகணைகள் வாங்க உள்ளது.

மேலும் 9.3 பில்லியன் அமெரிக்க டாலர்களை அதிவேக, தொலைதூர ஹைப்பர்சானிக் ஆயுத தயாரிப்பில் முதலீடு செய்ய உள்ளது.

மேலும் சுமார் 5பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் மிகப்பெரிய கடலடி கண்காணிப்பு அமைப்பு, 7பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பில் ஆளில்லா நீர்மூழ்கிகள் உட்பட பல புதிய அதிநவீன தளவாடங்களையும் வாங்க உள்ளது.

பத்தாண்டுகளில் ஆஸ்திரேலியா செலவிட உள்ள இந்த பணம் அந்நாட்டு ஜிடிபி இல் 2% அதிகமானது என்பது குறிப்பிடத்தக்கது.