டிசம்பரில் 83 தேஜாஸ் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்து !!

  • Tamil Defense
  • July 18, 2020
  • Comments Off on டிசம்பரில் 83 தேஜாஸ் விமானங்களுக்கான ஒப்பந்தம் கையெழுத்து !!

மிகவும் நீண்ட காலமாக எதிர்பார்க்கப்பட்ட தேஜாஸ் போர் விமான ஒப்பந்தம் வருகிற டிசம்பர் மாதம் கையெழுத்தாகும் என தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்த 83 தேஜாஸ் மார்க் 1ஏ விமானங்களின் மதிப்பு சுமார் 5.2 பில்லியன் அமெரிக்க டாலர்கள் ஆகும். இதன் செயல்பாட்டு திறன், ஆயுதங்கள், ஏவியானிக்ஸ் என அனைத்துமே மிகவும் சிறந்தது ஆகும்.

இது குறித்து ஹிந்துஸ்தான் ஏரோநாடிக்ஸ் லிமிடெட் நிறுவன இயக்குனர் மாதவன் கூறுகையில் ஒரு வருடத்திற்கு 16 முதல் 20 விமானங்கள் வரை தயாரிக்க முடியும் என கூறினார்.

இதை தவிர 18 தேஜாஸ் மார்க் 1 எஃப்.ஒ.சி ரக பயிற்சி விமானங்களை தயாரிக்கவும் மத்திய அரசு அனுமதி வழங்கி உள்ளது குறிப்பிடத்தக்கது.