
கொரானா தாக்குதல் காரணமாக இந்திய வகை போபர்ஸ் ஆர்ட்டில்லரியான தனுஷ் 155x45mm தயாரிப்பு தாமதம் ஆகியுள்ளது.மத்தியப் பிரதேசத்தின் ஜபல்பூரில் உள்ள கன் கேரேஜ் தொழிலகம் தான் இந்த ஆர்டில்லரியை தயாரிக்கிறது.
இந்த வருடம் 6 முதல் 8 ஆர்டில்லரிகள் இராணுவத்திற்கு வழங்கப்பட்டிருக்க வேண்டும்.ஆனால் கோவிட் காரணமாக இராணுவத்திற்கு டெலிவரி செய்யப்படவில்லை.நான்கு ஆர்டில்லரிகள் தயாராக உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.இவை சோதனை செய்யப்பட்டு தயாராக உள்ளதாகவும் அடுத்த தொகுதி தயாரிக்கப்பட்டு சோதனை செய்யப்படாமல் உள்ளது என தகவல்கள் வெளியாகியுள்ளது.
இந்த மாதம் தொழிலகம் மீண்டும் உற்பத்தி தொடங்கினாலும் கொரானா காரணமாக தயாரிப்பு மிக மெதுவாக நடைபெறுகிறது.
இராணுவம் தற்போது 114 தனுஷ் ஆர்டில்லரிகளை பெற உள்ளது.இவை நான்கு வருடத்திற்குள் இராணுவத்திற்கு வழங்கப்பட வேண்டும்.தனுஷ் ஆர்டில்லரி போபர்ஸ் அடிப்படையாக கொண்டு தயாரிக்கப்பட்டாலும் அதை விட நவீனமானதாகவும் அதிக தூரம் செல்லத்தக்கதாகவும் மேம்படுத்தப்பட்டுள்ளது.