
தைவானிய வெளியுறவு துறை அமைச்சரான ஜோஸஃப் வூ சமீபத்தில் சீனா தைவானை கைப்பற்ற தனது ராணுவத்தை தயார்படுத்தி வருவதாக தெரிவித்துள்ளார்.
சீனாவின் நடவடிக்கைகளை பார்க்கும் போது வான்வழி மற்றும் கடல்வழி ராணுவ நடவடிக்கைகளை சீனா அதிகபடுத்தி உள்ளதாக அவர் கூறினார்.
அடிக்கடி போர் ஒத்திகைகளை நடத்தி வரும் சீனா விரைவில் தைவானை கைப்பற்ற விரும்புகிறது எனவும்,
நாளுக்கு நாள் சீன அச்சுறுத்தல்கள் அதிகரித்து வருகிறது எனவும் அவர் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
கடந்த ஜூன் மாதத்தில் 8 முறை சீன விமானங்கள் தைவான் வான்பகுதியில் அத்துமீறி நுழைந்ததாக அந்நாட்டு அரசு தெரிவித்து இருந்த நிலையில்,
ஊடுருவல்கள் மக்களுக்கு தெரிவிக்கப்பட்டதை விடவும் அதிகமாக நடைபெற்றதாக கூறினார், அதாவது ஏறத்தாழ தினசரி அடிப்படையில் ஊடுருவல்கள் நடைபெற்றதாக அவர் கூறினார்.
மேலும் இத்தகைய செயல்பாடுகள் அச்ச உணர்வை அளிப்பதாகவும் அவர் கூறினார்.