
இந்திய விமானப்படைக்காக புதிய 12 Sukhoi-30MKI விமானங்கள் மற்றும் 21 MiG-29UPG விமானங்கள் வாங்க இராணுவ கொள்முதல் கூட்டத்தில் முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த புதிய மிக் விமானங்கள் நேரடியாக இரஷ்யாவில் இருந்து இறக்குமதி செய்யப்பட உள்ளது.மற்றும் சுகாய் விமானங்களை நமது ஹால் நிறுவனம் இந்தியாவில் தயாரிக்கும்.
இவை தவிர ஏற்கனவே படையில் உள்ள 59 மிக் விமானங்களை புதுப்பிக்கவும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கிட்டத்தட்ட 38000 கோடிகள் அளவிலான தளவாடங்கள் வாங்க அனுமதி வழங்கப்பட்டுள்ளது.மிக்-29 விமானங்கள் புதுப்பித்தல் மற்றும் புதிய விமானங்களுக்கான செலவு 7418 கோடிகள் ஆகும்.
10730 கோடிகள் செலவில் சுகாய் விமானங்கள் ஹால் நிறுவனம் தயாரிக்கும்.