
நாட்டின் மிகப்பெரிய கப்பல் கட்டுமான நிறுவனமான கொச்சி கப்பல் கட்டுமான தளம் நார்வே நாட்டு நிறுவனம் ஒன்றிற்கு கப்பல் கட்டி கொடுக்க உள்ளது.
நார்வே நாட்டின் மிகப்பெரிய நிறுவனங்களில் ஒன்றான நார்ஜேஸ் குருப்பன் ஏ.எஸ்.ஏ நிறுவனத்தின் ஒரு பிரிவான ஏ.எஸ்.கே.ஒ மேரிடைம் ஏ.எஸ் நிறுவனம் தான் இந்த ஆர்டரை வழங்கி உள்ளது.
இதன்படி சுற்றுச்சூழலுக்கு மாசு ஏற்படுத்தாத வகையில் மின்சாரத்தை உபயோகித்து இயங்கும் இரு தன்னாட்சி கப்பல்களை கட்டி கொடுக்க வேண்டும்.
இந்த கப்பல்கள் 67 மீட்டர் நீளமும், 1846கிலோவாட் ஹவர் திறன் கொண்ட மின்சார பேட்டரியில் இயங்கும் திறனையும் கொண்டவையாக இருக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த ஆர்டர் நமக்கு மிகவும் பெருமிதம் தான் ஆனால்
வெளிநாடுகளுக்கு மட்டும் அதிநவீன டிசைனில் கப்பல்களை கட்டி கொடுக்கும் கொச்சி கப்பல் கட்டுமான தளம் அதே கையோடு விக்ராந்த் விமானந்தாங்கி கப்பலையும் விரைவாக கட்டி முடித்து பின்னர் நவீன கப்பல்களை இந்திய கடற்படைக்கு கட்டி கொடுத்தால் மன நிறைவு தான் !!