பங்கோங்கின் பிங்கர் 5 பகுதியை விட்டு விலக மறுக்கும் சீனா.!! அடுத்து என்ன?

  • Tamil Defense
  • July 22, 2020
  • Comments Off on பங்கோங்கின் பிங்கர் 5 பகுதியை விட்டு விலக மறுக்கும் சீனா.!! அடுத்து என்ன?

இந்திய சீன எல்லைப்பிரச்சனை குறித்த நான்காம் கட்ட பேச்சுவார்த்தை முடிந்து படைவிலக்கம் கொள்வது என முடிவெடுத்த பிறகும் சீனப்படைகள் இன்னும் பிங்கர் 5 பகுதியை விட்டு வெளியேறாமல் உள்ளன.மிக மிக குறைந்த அளவிலேயே சீனப்படைகள் வெளியேறியுள்ளது எனவும் அடுத்த சில நாட்கள் மிக முக்கியமானதாக இருக்கும் எனவும் தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீன வெளியுறவு அமைச்சக செய்தி தொடர்பாளர் ஹூ சுன்யீங் பேசுகையில் இரு பக்கமும் படைவிலக்கம் கொள்ள முடிவெடுத்திருப்பதாக கூறியிருந்தார்.கடந்த ஜீலை 14ல் நான்காம் கட்ட பேச்சுவார்த்தையும் நடந்து முடிந்தது.

கோக்ரா,ஹாட் ஸ்பிரிங் மற்றும் கல்வான் பகுதிகளில் இருந்து சீனப்படைகள் வெளியேறி உள்ளது.பங்கோங் ஏரியின் பிங்கர் 4 பகுதியில் இருந்து மிக மிக குறைந்த அளவு படைவிலக்கம் நடைபெற்றுள்ளது.

ஆனால் இன்னும் முழு அளவில் பங்கோங் பகுதியை விட்டு சீனப்படைகள் அகலவில்லை.