இந்தியா ஈரான் உறவை பாதிக்கும் வகையிலான சீன ஒப்பந்தம் !!

  • Tamil Defense
  • July 13, 2020
  • Comments Off on இந்தியா ஈரான் உறவை பாதிக்கும் வகையிலான சீன ஒப்பந்தம் !!

சீனா வழக்கம் போலவே தனது பொருளாதாரத்தை வைத்து ஈரானையும் மடக்க நினைக்கிறது, அந்த வகையில் ஈரானுடன் ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சீனா முனைகிறது.

இந்த ஒப்பந்தத்தின்படி ஈரானில் வங்கிகள், உள்கட்டமைப்பு, மருத்துவம், தொழில்துறை, தகவல் தொழில்நுட்பம், துறைமுகங்கள், ரயில்வே என அனைத்திலும் சீனா உள்நுழைந்து தனது முதலீடுகளை விரிவுபடுத்தும்.

இதற்கு ஆரம்ப புள்ளியாக சுமார் 400 பில்லியன் அமெரிக்க டாலர்கள் மதிப்பிலான ஒப்பந்தம் ஒன்றை மேற்கொள்ள சீனா தீவிரமாக முயன்று வருகிறது. இந்த ஒப்பந்தத்தின் ஆயுட்காலம் சுமார் 18 ஆண்டுகள். இந்த 18 ஆண்டுகளில் சீனா ஈரானில் மிக வலுவாக காலூன்றி விடும்.

இதற்கு பதிலாக சீனா ஈரானில் இருந்து குறைந்த விலையில் கச்சா எண்ணெயை பெற்றுக் கொள்ளும்.

இது மட்டுமின்றி சீன ஈரானிய ராணுவங்கள் இடையிலான பயிற்சிகள், ஒத்துழைப்பு திட்டங்கள், ஆயுத தயாரிப்பு திட்டங்கள் என அனைத்துமே பன்மடங்கு அதிகரிக்கும் இப்படி சீன ஈரான் உறவுகள் புதிய உயரங்களை தொடக்கூடும்.

அத்தகைய சூழலில் இந்திய ஈரான் உறவுகள் கடும் சரிவை சந்திக்கும், இந்தியாவின் சாபஹார் துறைமுக திட்டம் பொய்த்து விடும்.

தற்போது இந்த ஒப்பந்தம் ஈரானிய பாராளுமன்றத்தால் இன்னும் அங்கீகரிக்கப்படவில்லை, ஆனால் ஈரானிய வெளியுறவு அமைச்சர் ஜாவத் ஜரிஃப் கூறுகையில் இத்திட்டம் பாராளுமன்ற ஒப்புதல் பெறப்பட்டு செயல்படுத்தப்படும் என கூறியுள்ளார்.