அதிக அளவில் ராஜினாமா செய்யும் சீன அணுசக்தி விஞ்ஞானிகள்; அதிர்ச்சியில் சீன அரசு !!
1 min read

அதிக அளவில் ராஜினாமா செய்யும் சீன அணுசக்தி விஞ்ஞானிகள்; அதிர்ச்சியில் சீன அரசு !!

சீன அரசின் மிக முக்கியமான அறிவியல் ஆய்வகம், அணுசக்தி பாதுகாப்பு தொழில்நுட்ப கல்லூரி ஆகும்.

இது சீனாவின் கிழக்கு பகுதியில் உள்ள ஹெஃபெய் நகரத்தில் அமைந்துள்ளது, இந்த ஆய்வகம் சீன அறிவியல் அகாடமியின் கீழ் இயங்கி வருகிறது.

சீனாவின் மிகச்சிறந்த அணு விஞ்ஞானிகள் 600 பேர் இங்கு பணிபுரிந்து வந்தனர், இவர்களில் 80% பேர் முனைவர் பட்டங்கள் பெற்றுள்ளனர்.

இந்த விஞ்ஞானிகள் சுமார் 200க்கும் அதிகமான சர்வதேச மற்றும் தேசிய ஆய்வு திட்டங்களில் பங்கேற்றுள்ளனர்.

தற்போது இந்த ஆய்வகத்தில் பணிபுரிந்து வந்த 500 விஞ்ஞானிகள் வேலையை ராஜினாமா செய்துவிட்டு தனியார் நிறுவனங்களுக்கு சென்றுள்ளனர்.

இதனையடுத்து பல்வேறு கட்ட விசாரணைகளுக்கு சீன அரசு உத்தரவிட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.