உலகில் யாரை வேண்டுமானாலும் குற்றவாளியாக்கும் புது சீன சட்டம் !!
சீனா ஹாங்காங் பிராந்தியத்தில் புதிய தேசிய பாதுகாப்பு சட்டத்தை நிறைவேற்ற தீவிரமாக செயல்பட்டு வருகிறது.
இந்த சட்டமானது ஹாங்காங் அல்லது சீன மக்களுக்கு மட்டும் செல்லுபடியாகும் சட்டமல்ல மாறாக சீன அரசுக்கு எதிராக யார் பேசினாலும் அவர்களை இச்சட்டம் குற்றவாளி ஆக்கிவிடும்.
இந்த புதிய சட்டத்தின் 38ஆவது பிரிவு இங்ஙனம் கூறுகிறது “ஹாங்காங் சிறப்பு நிர்வாக பிராந்தியத்தில் அமல்படுத்தப்படும் இந்த சட்டத்தின் கீழ் குறிப்பிடப்பட்டுள்ள குற்றங்களை அப்பிராந்தியத்தின் குடிமகனாக இல்லாத ஒரு நபர் அப்பிராந்தியத்திற்கு வெளியில் இருந்து செய்தாலும் இச்சட்டம் அந்த நபருக்கு செல்லுபடியாகும்” என்கிறது.
அதாவது சீன அரசையோ, அதன் நிர்வாகத்தையோ, அந்த சட்டத்தையோ சாடி சமுக வலைதளத்தில் அமெரிக்காவில் பணியாற்றும் இரு இந்தியர் பதிவிட்டாலும் கூட அவர் குற்றவாளியே, தப்பி தவறி அவர் சீனாவுக்கோ அல்லது ஹாங்காங்கிற்கோ சென்றால் சீன அரசால் அவரை கைது செய்ய முடியும்.
இது ஏற்கனவே இத்தகைய செயல்களில் ஈடுபட்டவர்களுக்கும் பொருந்தலாம், எது எப்படியோ சீனா இச்சட்டத்தை நிறைவேற்றி பயன்பாட்டில் வரும் வரை இதனை யாருக்கு எதிராக எந்த வகையில் பயன்படுத்த போகிறது என்பதை தெரிந்து கொள்ள காத்திருக்க வேண்டும்.
இதுகுறித்து செக்டன் சட்ட கல்லூரியில் பேராசியராகவும் ஹாங்காங் மற்றும் தைவானில் சிறப்பு சட்ட நிபுணராகவும் இருக்கும் மேகி லூயிஸ் கூறுகையில் “சீனா மிக நீண்ட காலமாகவே தனக்கு எதிராக பேசுபவர்களை சட்ட அதிகாரங்களை கொண்டு அடக்க தவறியது இல்லை” என்கிறார்.