சீனாவின் புதிய குவாய்சோ 11 ராக்கெட்டின் முதல் ஏவுதலே தோல்வி !!

  • Tamil Defense
  • July 11, 2020
  • Comments Off on சீனாவின் புதிய குவாய்சோ 11 ராக்கெட்டின் முதல் ஏவுதலே தோல்வி !!

சீனா குவாய்சோ11 ராக்கெட்டை சமீபத்தில் தயாரித்தது, இது ஏற்கனவே பயன்பாட்டில் இருக்கும் குவாய்சோ1ஏ ராக்கெட்டின் மேம்படுத்தப்பட்ட வடிவமாகும்.

வெள்ளிக்கிழமை அன்று வடமேற்கு சீனாவில் உள்ள ஜியுகுவான் ஏவுதளத்தில் இருந்து இரண்டு செயற்கைகோள்களுடன் ஏவப்பட்டது.

ஏவப்பட்ட முதல் ஒரு நிமிடம் வரை நன்கு செயல்பட்ட ராக்கெட் திடீரென வெடித்து விபத்துக்குள்ளானது, இதில் இரண்டு செயற்கைகோள்குளம் அழிந்தன.

முதலாவது செயற்கைகோள் ஜிலின்1 எனும் காணொளி பகிர்வு செயற்கைகோள் ஆகும், இது பிலிபிலி எனும் சீன காணொளி பகிர்வு வலைதளத்திற்காக உருவாக்கப்பட்டது.

இரண்டாவது செயற்கைகோள் சென்டிஸ்பேஸ் 1 எஸ்2 எனும் வழிகாட்டி செயற்கைகோள் ஆகும். இது பெய்ஜிங் எதிர்கால வழிகாட்டி தொழில்நுட்ப நிறுவனத்துடையது ஆகும்.

இந்த வருடம் இது சீனாவின் 19ஆவது ராக்கெட் ஏவுதல் ஆகும். அதே நேரத்தில் இது சீனா இந்த வருடம் சந்திக்கும் மூன்றாவது தோல்வி ஆகும்.

முறையே லாங் மார்ச் 7ஏ, லாங் மார்ச் 3பி மற்றும் குவாய்சோ 11 ஆகிய ராக்கெட்டுகள் இந்த வருடம் தோல்வியை தழுவி உள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.