
நேற்று பெண்டகன் வெளியிட்டுள்ள செய்திகுறிப்பில் தென்சீன கடலில் பராசெல் தீவுகளுக்கு அருகே போர்ப்பயிற்சி மேற்கொள்ள உள்ளது, இது நிலைமையை மேலும் மோசமாக்கும் என கூறியுள்ளது.
வருகிற 5 மற்றும் 6 ஆகிய தேதிகளில் நடைபெறவுள்ள இந்த போர்ப்பயிற்சிகள் வாயிலாக தென்சீன கடலில் தனது வலிமையையும் அதிகாரத்தையும் வெளிகாட்ட சீனா விரும்புகிறது.
இந்த குறிப்பிட்ட கடல்பகுதி வியட்னாம், தைவான் மற்றும் சீனா ஆககய நாடுகளால் உரிமை கோரப்படும் பகுதியாகும். ஆகவே ஏதேனும் ராணுவ நகர்வு மிகப்பெரிய பிரச்சகனையில் கொண்டு போய் விடும் என்பதில் சந்தேகமில்லை.
ஏற்கனவே அமெரிக்க கடற்படை தனது மூன்று மாபெரும் விமானந்தாங்கி கப்பல்களை இந்தோ பஸிஃபிக் பிராந்தியத்தில் நிலைநிறுத்தி உள்ளது குறிப்பிடத்தக்கது.