செயற்கைகோள்களை லேசர் மூலம் அழிக்கும் திறன் பெற்றுள்ள சீனா; இந்தியாவிற்கு ஆபத்தா ?

  • Tamil Defense
  • July 14, 2020
  • Comments Off on செயற்கைகோள்களை லேசர் மூலம் அழிக்கும் திறன் பெற்றுள்ள சீனா; இந்தியாவிற்கு ஆபத்தா ?

தரைசார் லேசர் அமைப்பு முதல் இந்திய மற்றும் அமெரிக்க செயற்கைகோள்களை சீனாவால் அழிக்க முடியும் எனவும் இந்த லேசர் கொண்டு செயற்கைகோள்களின் சென்சார்களில் பாதிப்பை ஏற்படுத்த முடியும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

போர் காலங்களில் இதன்மூலம் சீனாவால் இந்தியா மற்றும் அமெரிக்காவிற்கு பாதிப்பை ஏற்படுத்த முடியும் என கூறப்படுகிறது.தாழ் ஆர்பிட்டில் பறந்து வரும் செயற்கை கோள்களை இதன் மூலம் அழிக்க முடியும் என பென்டகன் வெளியிட்ட தகவலில் தெரிகிறது.

சீனாவின் ஷின்ஷியாங் பகுதியில் இதுபோன்றதொரு செயற்கைகோள் அடையாளம் காணப்பட்டுள்ளதாக வல்லுநர்கள் தகவல் வெளியிட்டுள்ளனர்.

ஷாங்காய்,சாங்சுன்,பெய்ஜிங்,வுகான் மற்றும் குமிங் பகுதியில் நிரந்தர தளங்களும் இரு நகரும் திறன் பெற்ற ஸ்டேசன்களும் ஏற்படுத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்தியாவிடம் செயற்கைகோளை அழிக்கும் ஏவுகணை உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.