
பாங்காங் ஸோ ஏரியின் வடக்கு கரையில் அமைந்துள்ள ஃபிங்கர்4 பகுதியில் இருந்து சீன ராணுவம் முழுமையாக வெளியேறி ஃபிங்கர்5 பகுதிக்கு சென்றால் தான் பின்வாங்குதல் நடவடிக்கையின் முதல் கட்டம் நிறைவடையும்.
ஆனால் ஃபிங்கர்4 பகுதியில் மூன்று இடங்களில் இருந்து மட்டும் தான் சீன ராணுவம் பின்வாங்கி உள்ளது என கூறப்படுகிறது, அவர்கள் முழுவதுமாக வெளியேறி ஃபிங்கர்5 பகுதிக்கு செல்ல வேண்டும் என்பது தான் நடைமுறையில் ஒப்பு கொள்ளப்பட்ட விஷயம்.
தற்போது வரை சில கூடாரங்களை அகற்றியும், வாகனங்களை பின்வாங்கியும் வீரர்கள் எண்ணிக்கையையும் ஃபிங்கர்4 பகுதியில் இருந்து குறைத்துள்ளனர் ஆனால் முழு அளவில் இனி தான் அவர்கள் பின்வாங்க வேண்டும்.
சீன ராணுவம் சுமார் 3000 வீரர்களோடு ஃபிங்கர்8 முதல் ஃபிங்கர்4 வரையிலான 8கிமீ நீளம் கொண்ட பகுதிளில் ஊடுருவி உள்ளது.
சீன ராணுவம் தற்போது ஃபிங்கர் 8 முதல் ஃபிங்கர் 2 வரைமிலான பகுதிகளை உரிமை கோரி வருகிறது ஆனால் இந்திய ராணுவம் சீனர்கள் ஃபிங்கர்8 பகுதி வரை தான் அவர்களுடையது எனக்கூறி ஃபிங்கர்8 பகுதிக்கு திரும்பி செல்ல வலியுறுத்தி வருகிறது.
இந்திய ராணுவத்திற்கு ஃபிங்கர்2 மற்றும் ஃபிங்கர்3 க்கு இடையில் ஒரு சிறிய தளமும், ஃபிங்கர்3 மற்றும் ஃபிங்கர்4 க்கு இடையில் ஒரு நிர்வாக தளமும் உள்ளது குறிப்பிடத்தக்கது.