ஃப்ரெஞ்சு வெளியுறவு துறை அமைச்சர் ஜீன் யீவ்ஸ் லெ ட்ரேயின் சமீபத்தில் சீனா நிகழ்த்தி வரும் மனித உரிமை மீறல்கள் குறித்து பேசினார்.
அப்போது உய்குர் மக்கள் நடத்தப்படும் விதம் ஏற்றுக்கொள்ள முடியாத மனித உரிமை மீறல் எனவும்,
உய்குர் மக்கள் காணாமல் போவது, கட்டாயப்படுத்தி வேலை வாங்கப்படுவது, கட்டாயப்படுத்தி குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுவது, உய்குர் கலாச்சாரம் அழிக்கப்படுவது போன்ற கொடுமைகளை அனுபவித்து வருவதாகவும் கூறினார்.
மேலும் அவர் பேசுகையில் ஃபிரெஞ்சு அரசு இவற்றை எல்லாம் கவனத்தில் கொண்டுள்ளதாகவும்,
ஐக்கிய நாடுகள் சபையின் ஆய்வுக்குழுவை இதுகுறித்த விசாரணைக்கு சீனா அனுமதிக்க வேண்டும் என ஃபிரான்ஸ் அரசு வலியுறுத்துவதாகவும் அவர் கூறினார்.