சீனாவுக்கு நெத்தியடி; தென்சீன கடலில் சீனா உரிமை கோருவது சட்ட விரோதம் என அமெரிக்கா அறிவிப்பு !!

  • Tamil Defense
  • July 14, 2020
  • Comments Off on சீனாவுக்கு நெத்தியடி; தென்சீன கடலில் சீனா உரிமை கோருவது சட்ட விரோதம் என அமெரிக்கா அறிவிப்பு !!

அமெரிக்க வெளியுறவு அமைச்சர் மைக் பாம்பியோ சீனாவை கண்டித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டு உள்ளார்.

அதில் சீனா தென்சீன கடல் பகுதியில் உள்ள வளங்களை மனதில் வைத்து கொண்டு மிகப்பெரிய அளவிலான பகுதிகளை சட்ட விரோதமாக உரிமை கோருவதாக குறிப்பிடப்பட்டுள்ளது.

மேலும் அந்த அறிக்கையில் சீனா உரிமை கோரும் பகுதிகள் குறிப்பிடப்பட்டுள்ளன.

அவையாவன;
1) மலேசியாவில் இருந்து 50 நாட்டிகல் மைல் தொலைவில் உள்ள ஜேம்ஸ் ஷோல் பகுதி.

2) வியட்நாம், இந்தோனேசியா மற்றும் ஃபிலிப்பைன்ஸ் ஆகிய நாடுகளின் கடல்பகுதிகள்.

3) மேலும் சீனாவின் கடற்கரை பகுதியில் இருந்து 1000 நாட்டிகல் மைல்களுக்கு அப்பால் இருக்கும் பகுதிகள்.

சீனாவின் கபளீகர எண்ணத்திற்கு 21ஆம் நூற்றாண்டில் இடமில்லை எனவும், அமெரிக்கா தனது தென்கிழக்கு ஆசிய நண்பர்களுக்கு துணை நிற்கும் எனவுமா அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.