டென்ட் மற்றும் வாகனங்களுடன் மூன்று இடங்களில் இருந்து பின்வாங்கிய சீனப்படைகள்

  • Tamil Defense
  • July 6, 2020
  • Comments Off on டென்ட் மற்றும் வாகனங்களுடன் மூன்று இடங்களில் இருந்து பின்வாங்கிய சீனப்படைகள்

இரு நாடுகளின் அமைதிப் பேச்சுவார்த்தைகளுக்கு பிறகு ஏற்பட்ட நடவடிக்கையாக கல்வான் பகுதியில் இருந்து சீனா தங்களது படைகளை பின்நோக்கி நகர்த்தியுள்ளது.கல்வான் பகுதி,கோக்ரா மற்றும் ஹாட் ஸ்பிரிங் ஆகிய உரசல் பகுதியில் இருந்து படைவிலக்கம் நடைபெற்றுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

சீனா குறிப்பிட்டபடி தனது படைகளை விலக்கியுள்ளதா என்பதை இந்தியப் படைகள் ஆராய்ந்து உறுதி படுத்தியுள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளது.

இது தொடர்ந்தால் கண்டிப்பாக பிரச்சனை எளிதாக தீரும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.பின்வாங்குதலில் இதுதான் முதல்படி எனவும் முழுவதும் பின்வாங்க இன்னும் காலமாகும் என தகவல்கள் வெளியாகியுள்ளது.

ஜீன் 30ல் நடைபெற்ற பேச்சுவா்த்தையின் போது ரோந்து பாயிண்ட் 14,15,17 ஆகிய பகுதிகளில் இருந்து படைகளை விலக்க முடிவெடுக்கப்பட்டிருந்தது.

ரோந்து பகுதி 14ல் இருந்த டென்டுகளை சீனர்கள் காலிசெய்துள்ளனர்.

பாங்கோங் பகுதி நிலைமை அப்படியே தொடர்கிறது.