பிங்கர் 4 பகுதியில் இருந்து முழுதும் வெளியேற மறுக்கும் சீனா-முழு உசார் நிலையில் நமது இராணுவம்

  • Tamil Defense
  • July 17, 2020
  • Comments Off on பிங்கர் 4 பகுதியில் இருந்து முழுதும் வெளியேற மறுக்கும் சீனா-முழு உசார் நிலையில் நமது இராணுவம்

பங்கோங் பகுதியின் பிங்கர் 4 பகுதியில் இருந்து சீன இராணுவம் முழுதும் வெளியேற மறுத்துள்ள நிலையில் மீண்டும் எல்லையில் பதற்றம் அதிகரித்துள்ளது.

இன்னிலையில் சீன இராணுவம் எவ்வித தாக்குதல் நடத்தினாலும் அதை முழுவதுமாக முறியடிக்க கிழக்கு லடாக் பகுதியில் முழு தயார் நிலையில் இராணுவம் நிறுத்தப்பட்டுள்ளது.

பீஷ்மா டேங்குகள்,அப்பாச்சி வானூர்திகள்,சுகாய் போர்விமானங்கள் ,சின்னூக்,ருந்ரா வானூர்திகளுடன் 60000 வீரர்கள் தயார் நிலையில் உள்ளனர்.

இத்துடன் இராணுவ அமைச்சர் அவர்கள் வரும்
ஜீலை17-18ல் காஷ்மீருக்கு பயணம் செய்ய உள்ளார்.மேலும் வடக்கு இராணுவ கட்டளையக தளபதி லெப் ஜென் ஜோசி அவர்கள் நிலைமையை பிரதமருக்கு விளக்க டெல்லியில் உள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன.

பதற்றத்தை குறைக்க நடத்தப்பட்ட நான்காம் கட்ட பேச்சுவார்த்தையின் போது பிங்கர் 4 பகுதியில் இருந்து சீன இராணுவம் வெளியேற மறுத்துவிட்டதாக முன்னனி செய்தி நிறுவனங்கள் செய்தி பகிர்ந்துள்ளன.