திபெத் மற்றும் தென்சீன கடல் பகுதியில் சீனா போர் பயிற்சி !!

திபெத் பகுதியில் சீன ராணுவம் நீண்ட தூர துல்லிய தாக்குதல் பயிற்சிகளை நடத்தி உள்ளது, இந்த பயிற்சியில் அதிநவீன பிரங்கிகள் பயன்படுத்த பட்டுள்ளன.

இது குறித்து சீனா வெளியிட்டுள்ள அறிக்கையில் இது வழக்கமான வருடாந்திர அடிப்படையிலான பயிற்சி எனவும், எந்த நாட்டுக்கும் எதிரானது அல்ல என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதை தவிர சீன கடற்படை தனது ஹெச் 6ஜி மற்றும் ஹெச் 6ஜே ஆகிய குண்டுவீச்சு விமானங்களை கொண்டு போர் பயிற்சி மேற்கொண்டது.

இதில் இரவு நேர இயக்கம், தொலைதூர தாக்குதல் மற்றும் கடற்படை இலக்குகளை தாக்குவது போன்ற பயிற்சிகள் மேற்கொள்ள பட்டன.